Monday, September 5, 2016

பொது அறிவு - 5

1.  ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
 திரு. சரண்சிங்.

 2.  உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
 ஜூன் 5.

 3.  மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
 உதடு.

 4.  ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
 கிட்டத்தட்ட 2.5  ஏக்கர்.

 5.  வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
 அராக்கிஸ் ஹைபோஜியா.

 6.  பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
 விஷ்ணு சர்மா.

 7.  வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில்  பகலும், இரவும் சரியாக
12  மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.

 8.  மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
 22 .

 9.  ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.



பழந்தமிழர் அளவைகள்



ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி. மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள். ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.



ஆங்கில புத்தாண்டு உருவானது எப்படி

ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் பின்பற்றும் காலண்டரின் ஆண்டு துவக்கத்தைக் கொண்டாடுவது வழக்கம்.

தமிழர்கள் தங்கள் வருடப்பிறப்பை “சித்திரை” மாதத்திலும், கேரளத்தவர்கள் “கொல்லம்” என்றும் தெலுங்கர்கள் “யுவாதி” எனவும் கொண்டாடுவார்கள்.

ஆனால், ஜனவரி முதல் தேதி உலகம் முழுவதும் ஜாதி, இனம், மத வேறுபாடின்றி ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பண்டையகாலத்தில் மார்ச் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. மார்ச் வசந்தத்தின் தொடக்கம். ரோமானியர்களின் கடவுளான “மார்ஸ்” என்பதிலிருந்துதான் மார்ச் உருவானது.

அப்போது ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. பின்னர் ஜனவரி 11 வது மாதமாகவும், பிப்ரவரி மாதம் 12வது மாதமாகவும் சேர்க்கப்பட்டது. “பிப்ருவேர்” என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்கு “சுத்தம் செய்தல்” என அர்த்தம். ஆண்டின் கடைசி மாதமாக பிப்ரவரி இருந்ததால் புத்தாண்டை வரவேற்க அம்மாதத்தில் ஆலயங்களும், வீடுகளும் சுத்தப்படுத்தப்பட்டன.

கி.மு. 153 ம் ஆண்டு முதல் ரோமானிய பேரரசில் ஜனவரி மாதம் ஆண்டின் முதல் மாதமாக மாறியது. “ஜானுஸ்” என்றால் லத்தீன் மொழியில் “வாயில்களின் கடவுள்” என்று அர்த்தம். ஜனவரி மாதம் வாயில்களின் கடவுளுக்குரிய மாதமாக பண்டையகால ரோமானிய மக்கள் நம்பினர். கி.மு 45 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டுவரும் நவீன கிரிகோரியன் மற்றும் ஜூலியன் காலண்டர்களின் தொடக்க நாள் ஜனவரி 1 ஆகும். கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தபோது ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டு தினமாக கொண்டாடிய முதல் நாடு ஸ்காட்லாந்து. அந்த நாடுதான் 1060 ம் ஆண்டில் முதன் முதலாக ஜனவரி மாதத்தில் புத்தாண்டு கொண்டாடியது. அதனைத்தொடர்ந்து அனைத்து நாடுகளும் அதனைப் பின்பற்றி வருகின்றன.

கிறிஸ்தவர்கள் தம் கடவுளாக வழிபடும் இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலிக்கன் தேவாலயம், லுத்தரன் தேவாலயம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் ஜனவரி 1 ஆம் தேதியையே புத்தாண்டு தொடக்கமாக அங்கீகரித்து கொண்டாடி வருகின்றன.



கிளிகள் பற்றிய தவல்கள்

* கிளி (Parrot) சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த வலுவான அலகினை உடையவை.

* கிளியின் கால்கள் முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்களைக் கொண்டவை. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். கிளிகள் மிகவும் புத்திசாலி பறவைகள்.

* கிளியால் தன் அலகுகளின் மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். இவற்றிற்கு கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும். 

* கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கப்பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது.

* பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன. விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவுகள்.

* கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை. கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.

* ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும்.
பொது அறிவு



* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.
* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.
* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.
* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.
* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.
* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.
* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).
* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.
* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.
* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.
* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.
* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.
* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.
* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.
* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.
* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.
* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.
* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.
* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.



டிசம்பர் முக்கிய தினங்கள்

1 - எய்ட்ஸ் தினம்
2 - உலக அடிமைத்தொழில் ஒழிப்பு தினம்
2 - உலக மாசு தடுப்பு நாள்
3 - ஊனமுற்றோர் தினம்
4 - தேசிய கடற்படை தினம்
5 - உலகத் தன்னார்வலர் தினம்
7 - உலக விமானப் போக்குவரத்து தினம்
7 - கொடி நாள்
9 - சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
12 - உலக அமைதி நாள்
13 - உலக ஆஸ்துமா தினம்
14 - தேசிய சக்தி சேமிப்பு தினம்
18 - சிறுபான்மையினர் உரிமை தினம்
20 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு தினம்
22 - உலக கணக்கு தினம் (ராமானுஜம் பிறந்தநாள்)
23 - உலக விவசாயிகள் தினம்
24 - தேசிய நுகர்வோர் தினம்
25 - கீழவெண்மணி நினைவு நாள்
25 - கிறிஸ்துமஸ்
26 - சுனாமி தினம்

பொது அறிவு

1. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
2. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
3. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)
4. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
5. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
6. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)
7. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)
8. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)
9. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்
10. கோயில் நகரம் – மதுரை
11. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
12. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
13. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....



பொது அறிவு

01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
08. உலகில் மிக அதிகமாக மின்னலால்பாதிக்கப்படும் நாடு – பனாமா
09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்
10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்
11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா
12. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )
13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா
14. சத்தில்லாத உணவு - நீர்
15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை
16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ
17. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்
18. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு
19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்
20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி                        
[05:49, 9/4/2016] Wr Veera: Current Affairs
1. செல்ஃபி (Selfi) - என்ற வார்த்தைக்கு தினமணி நாளிதழில் பயன்படுத்த்தப்ப
ட்டுள்ள தமிழாக்கம் - ”கைப்படம்”
2. உலக நாடுகளில், மொத்த தனிநபர் சொத்து மதிப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் (செல்வ செழிப்புமிக்க நாடுகள் பட்டியல்) இந்தியா 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
 சர்வதேச சந்தை ஆய்வு அமைப்பான "நியூ வேர்ல்டு வெல்த்', இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி அதிக மதிப்பிலான மொத்த தனி நபர் சொத்துகளைக் கொண்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.
 இந்தியர்களின் மொத்த தனிநபர் சொத்தின் மதிப்பு 5.6 லட்சம் கோடி டாலர்கள் (சுமார் ரூ.3,700 லட்சம் கோடி) என்று அந்தப் பட்டியல் குறிப்பிடுகிறது.
 48.9 லட்சம் கோடி டாலர் தனி நபர் சொத்து மதிப்புடைய அமெரிக்கா முதலிடத்திலும், 17 லட்சம் கோடி டாலர் தனி நபர் சொத்து மதிப்புடைய சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
 இவை தவிர, ஜப்பான் (3), பிரிட்டன் (4), ஜெர்மனி (5), பிரான்ஸ் (6), கனடா (8), ஆஸ்திரேலியா (9), இத்தாலி (10) ஆகிய நாடுகள், அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
3. அண்டை நாடான வங்கதேசத்துக்கான "ஆகாஷ்வாணி மைத்ரி' என்ற பெயரில் வானொலி சேவையையும், அதன் இணையதளச் சேவையையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் 23-08-2006 அன்று தொடக்கி வைத்தார்.
4. உயிர்க்கொல்லி நோயான பெரியம்மையை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய மருத்துவ விஞ்ஞானி டொனால்டு ஹெண்டர்ஸன் தனது 87-ஆவது வயதில் மறைந்தார்.
5. மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளார். சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
6. மும்பை குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் வசித்து வருவதாக இந்தியா அளித்த தகவல்களை ஐ.நா. அமைப்பு உறுதி செய்துள்ளது.
7. சர்வதேச ஆடவர் ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி ஓர் இடத்தை இழந்து 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதியோடு வெளியேறியதன் மூலம் தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, ஒலிம்பிக்கில் 6-ஆவது இடத்தைப் பிடித்தபோதிலும், தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.
8. புதுச்சேரி யோகா மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் சிறந்த யோகா ஆசிரியருக்கான விருது (யோகன்) நிகழாண்டு முதல் வழங்கப்பட உள்ளது.
9. மத்திய அரசின் வாடகைத் தாய் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 வாடகைத் தாய் முறை வாயிலாக சட்ட விதிகளுக்குப் புறம்பாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இம்மசோதா வழிவகுக்கும்.
 வெளிநாட்டுத் தம்பதியினர் இந்தியப் பெண்களை வாடகைத் தாயாகப் பயன்படுத்தத் தடை விதிக்கும் விதிகள் அந்த மசோதாவில் வகுக்கப்பட்டுள்ளன.
 இந்த மசோதாவின்படி, திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோர் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை. அவ்வாறு சட்டவிரோதமாகவோ, வர்த்தகநோக்கிலோ குழந்தை பெற்றால், அதில் தொடர்புடையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த மசோதாவில் இடமுண்டு.
தினமலர்
10. தமிழக அரசுக்கான வரி வருவாயில், 75 சதவீதம் வணிகவரித் துறை மூலமாகவே கிடைக்கிறது. 2015 - 16ம் ஆண்டில், 72,068 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்
டதில், 61,709 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டத
ு.
தினத்தந்தி
11. ‘ஸ்கார்பீன்‘ நீர்மூழ்கி கப்பல் ரகசியங்கள் கசிவு :
 இந்திய கடற்படைக்கு ‘ஸ்கார்பீன்‘ என்னும் 6 அதிநவீன ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் கப்பல்கள் கட்டும் நிறுவனமான டி.சி.என்.எஸ். உடன் 2011ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.
 இந்த 6 கப்பல்களுக்கான ஒப்பந்த தொகையின் அப்போதைய மதிப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.20 ஆயிரம் கோடி) ஆகும்.
 இந்த கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.இந்நிலையில் நீர்மூழ்கி கப்பல்களின் ரகசியம் வெளியானதால் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தும்படி பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் உத்தரவிட்டு உள்ளார்.
12. இத்தாலியில் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் தரைமட்டம் ஆகின. இதில் 73 பேர் உயிரிழந்தனர். நொர்சியா மாகாணத்தில் உள்ள அம்பிரியான் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் ரோம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை உலுக்கியது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
13. சமீபத்தில் செய்திகளில் வரும் ‘தஹி ஹண்டி’ பற்றி : கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மராட்டியத்தில் நடத்தப்படும் ‘தஹி ஹண்டி’ எனப்படும் தயிர்ப்பானை உடைக்கும் நிகழ்ச்சியில், சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மனித பிரமிடுகள் அமைத்து, குறிப்பிட்ட உயரத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் தயிர்ப்பானையை உடைப்பது வழக்கம்.இந்த நிலையில், தஹி ஹண்டி நிகழ்ச்சிக்கு மும்பை ஐகோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இதில் ஈடுபடுத்த கூடாது என்றும், 20 அடி உயரத்துக்கு மேல் மனித பிரமிடு அமைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. மும்பை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டு விதித்த உத்தரவை உறுதிசெய்தனர்.
14. உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலில் இந்தியாவின் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே 10-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அமெரிக்க நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் 2-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்
15. அன்னைத் தெரசாவிற்கு இந்திய அஞ்சல் துறையின் மரியாதை : அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகன் நகரில் வருகிற 4–ந்தேதி நடக்கிறது.இதையொட்டி, இந்திய தபால் இலாகாவான ‘இந்தியா போஸ்ட்’ ஆயிரம் எண்ணிக்கையிலான சிறப்பு தபால் உறை ஒன்றை வருகிற செப்டம்பர் 2–ந்தேதி வெளியிடுகிறது. முற்றிலும் தூய்மையான பட்டுத் துணியால் உருவாக்கப்பட்ட இந்த தபால் உறையுடன் அன்னை தெரசாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி 2010–ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாணயமும் இணைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தபால் உறை இந்தியாவில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
தி இந்து
16. மெரினாவில் 'பாய்மரப் படகு அகாடமி' ஒன்று நிறுவப்படும். மேலும், பாய்மரப் படகு மற்றும் துடுப்பு படகு போட்டிகளுக்கான திறன்மிகு பயிற்சி மையம் ஒன்றும் ஏற்படுத்தப்படும். இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் ரூ.7 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Others
17. 2016 ஆம் ஆண்டிற்கான, உலகக் கோப்பை கபடி போட்டி நடைபெறவிருக்கும் இந்திய நகரம் - அஹமதாபாத், குஜராத்
18. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா 2016 ஐ இதுவரையில் அமல்படுத்தியுள்ள மாநிலங்கள் (கால வரிசையில்) - அஸ்ஸாம், பீகார், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத் (இந்த சட்டமானது குடியரசுத்தலைவரால் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அனுப்பபடவேண்டும
ெனில், குறைந்தது 15 மாநிலங்களின் சட்டமன்றங்களினால் ஏற்றுக்கொள்ளப்ப
டவேண்டும்)
19. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ‘அழைப்பின் பேரில் ஆசிரியர்கள்’ (Teacher on Call) எனும் திட்டத்தில் பணியமர்த்தியுள்ள மாநிலம் - ஒடிசா
20. 17 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு பரிந்துரைத்துள்ள இந்திய மாநிலம் - தெலுங்கானா
21. ’சுகமாயா புஸ்தகாலயா’ (‘Sugamaya Pustakalaya) - ’அச்சு புத்தகங்களை பயன்படுத்த இயலாதவர்களுக்காக’ (Persons with print disabilities) மத்திய அர்சால் உருவாக்கப்பட்டுள்ள இணையதள நூலகம்
22. ஆகஸ்டு 2016 ல் சார்க் அமைப்பின் நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம் - இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
23. மத்திய அரசின் குரூப் ’A’ பணிகளைப்பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் - T.ஜேக்கப் (T Jacob)
24. அடிமை வியாபாரம் மற்றும் ஒழிப்பிற்கான சர்வதேச நினைவு தினம் - ஆகஸ்டு 23
25. இந்திய விமானப்படையினால் புதிதாக ‘வான்வெளி அருங்காட்சியகம்’ (Aerospace Museum) அமைக்கப்படவுள்ள இடம் - புது தில்லி
26. இந்திய பெருங்கடலின் வரலாறு பற்றி சமீபத்தில் வெளியான ‘The Book' எனும் புத்தகத்தின் ஆசிரியர் - சஞ்சீவ் சன்யால்
27. இந்திய அஞ்சல் செலுத்து வங்கி (India Post Payment Bank) வரும் மார்ச் 2017 ல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
28. தனக்கென தனியாக ‘உள் பாதுகாப்பு சட்டம்’ (internal security act) உருவாக்கியுள்ள முதல் இந்திய மாநிலம் - மஹாராஷ்டிரா

No comments:

Post a Comment